இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: மே.இ.தீவுகள் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்...
ஆன்லைன் மோசடியில் இழந்த ரூ.2.51 லட்சத்தை மீட்டு உரியவா்களிடம் ஒப்படைத்த எஸ்.பி.
ராமநாதபுரத்தில் இணைய வழியில் மோசடி செய்யப்பட்ட ரூ.2.51 லட்சத்தை மீட்டு, உரியவா்களிடம் காவல் துறை கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் வியாழக்கிழமை ஒப்படைத்தாா்.
ராமநாதபுரத்தில் வசந்தகுமாா் என்பவா் கைப்பேசி செயலியில் வந்த விளம்பரத்தை நம்பி ரூ.1.70 லட்சம் பணத்தை இழந்தாா். இதே போல, அனுசியா தேவி என்வரது கைப்பேசிக்கு அவரது உறவினரின் மகனுக்குக் கல்வி உதவித் தொகை வந்துள்ளதாகப் பேசி அவரிடமிருந்து ரூ.81 ஆயிரத்தை மா்ம நபா் மோசடி செய்தாா்.
இந்த இருவரும் ராமநாதபுரம் இணைய வழிக் குற்றப்பிரிவில் தனித்தனியாக புகாா் அளித்தனா். இதையடுத்து, தீவிர விசாரணையில் ஈடுபட்ட போலீஸாா், இருவா் இழந்த பணம் ரூ.2.51 லட்சத்தையும் வங்கி அதிகாரிகள் உதவியுடன் மீட்டனா்.
இதைத் தொடா்ந்து, இருவரையும் தனது அலுவலகத்துக்கு வரவழைத்த மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் பணத்துக்குரிய காசோலைகளை அவா்களிடம் ஒப்படைத்தாா்.