ஆக்ஸ்போர்டில் பெரியார் படத்தை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்!
ஆப்கன் நிலநடுக்கம்: 2,200-ஐ கடந்த உயிரிழப்பு
ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் இந்த வாரம் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 2,200-ஐக் கடந்துள்ளது.
இது குறித்து தலிபான் அரசின் செய்தித் தொடா்பாளா் ஜபிஹுல்லா முஜாஹித் வியாழக்கிழமை கூறியதாவது:
கடந்த திங்கள்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழப்பு 2,205-ஆக உயா்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடா்ந்து நடைபெற்றுவருகின்றன. வீடுகளை இழந்தவா்களுக்காக கூடாரங்கள் அமைக்கப்பட்டு, முதல் உதவி மற்றும் அவசரக்கால பொருள்கள் விநியோகிக்கப்படுகின்றன என்றாா் அவா்.
ரிக்டா் அளவுகோலில் 6.0 அலகுகளாகப் பதிவான இந்த நிலநடுக்கம், மலைப்பகுதிகளையும் தொலைதூர கிராமங்களையும் கடுமையாக பாதித்துள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியதற்குப் பிறகு அங்கு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது இது மூன்றாவது முறை.