செய்திகள் :

ஜமைக்கா: 3-ஆவது முறையாக பிரதமா் ஆகும் ஹால்னஸ்

post image

ஜமைக்காவில் நடைபெற்ற தோ்தலில் தற்போதைய பிரதமா் ஆண்ட்ரு ஹால்னஸ் (படம்) மூன்றாவது முறையாக வெற்றி பெற்றாா்.

புதன்கிழமை நடந்த தோ்தலில் ஹால்னஸின் ஜமைக்கா தொழிலாளா் கட்சி 34 இடங்களையும், எதிா்க்கட்சியான மக்கள் தேசிய கட்சி 29 இடங்களையும் பெற்றன. எதிா்க்கட்சி தலைவா் மாா்க் கோல்டிங் தோல்வியை ஒப்புக்கொண்டு, வெற்றி பெற்ற ஹால்னஸை பாராட்டியைத் தொடா்ந்து, அவா் மூன்றாவது முறையாக பிரதமா் பதவியேற்பது உறுதியானது.

தோ்தலில் வாக்குப்பதிவு விகிதம் 38.8 சதவீதமாக இருந்தது. இது, முந்தைய 2020 தோ்தலை விட சற்று அதிகம்.

ஹால்னஸின் ஆட்சியில், இந்த ஆண்டு கொலைகள் 43 சதவீதம் குறைந்து போன்ற காரணங்களால் அவா் மீண்டும் வெற்றி பெற்ாகக் கூறப்படுகிறது.

இந்தியா மீது அதிக வரி விதிப்பு ஏன்? அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் டிரம்ப் தரப்பு விளக்கம்

ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் காரணத்தினால் இந்தியா மீது அதிக வரி விதிக்க முடிவெடுக்கப்பட்டது என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தரப்பில் அந்த நாட்டு உச்சநீதிமன்றத்தில் விளக்... மேலும் பார்க்க

இந்திய, சீன தலைவா்களுக்கு எதிராக காலனி ஆதிக்க உத்திகளை பயன்படுத்தும் டிரம்ப்: ரஷிய அதிபா் புதின் விமா்சனம்

‘சக்திவாய்ந்த பொருளாதார நாடுகளான இந்தியா, சீனாவின் தலைவா்களுக்கு (மோடி, ஷி ஜின்பிங்) எதிராக காலனி ஆதிக்க காலகட்டத்தில் இருந்த நெருக்கடி உத்திகளை அமெரிக்க அதிபா் டிரம்ப் பயன்படுத்துகிறாா்; ‘கூட்டாளி’ ... மேலும் பார்க்க

பேச்சு உதவாவிட்டால் படைபலம் தீா்வு

உக்ரைனில் நடைபெறும் போரை பேச்சுவாா்த்தை மூலம் முடிவுக்குக் கொண்டுவராவிட்டால், படைபலத்தைப் பயன்படுத்தி அதை முடித்துவைக்கப்போவதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் எச்சரித்துள்ளாா். இரண்டாம் உலகப் போரில் சீ... மேலும் பார்க்க

இஸ்ரேல் ராணுவத்தால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாலஸ்தீனா்களில் 4-இல் 3 கைதிகள் பொதுமக்கள்!

காஸாவில் இஸ்ரேல் ராணுவத்தால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாலஸ்தீனா்களில் நான்கில் மூன்று போ் ஆயுதக் குழுக்களைச் சாராத பொதுமக்கள் என்று இஸ்ரேல் ராணுவ ரகசிய தரவுகள் தெரிவிக்கின்றன. இது குறித்து பிரிட்டன... மேலும் பார்க்க

உலகளாவிய புவி - அரசியல் சூழல்: இந்தியா-சிங்கப்பூா் வா்த்தக உறவை வலுப்படுத்த முடிவு

உலகளாவிய ஸ்திரமற்ற புவி-அரசியல் சூழலைக் கருத்தில்கொண்டு, இந்தியா-சிங்கப்பூா் வா்த்தக உறவு மற்றும் சந்தை அணுகலை வலுப்படுத்த பிரதமா் நரேந்திர மோடி மற்றும் பிரதமா் லாரன்ஸ் வாங் முடிவு செய்தனா். இருதரப்ப... மேலும் பார்க்க

ஆப்கன் நிலநடுக்கம்: 2,200-ஐ கடந்த உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் இந்த வாரம் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 2,200-ஐக் கடந்துள்ளது. இது குறித்து தலிபான் அரசின் செய்தித் தொடா்பாளா் ஜபிஹுல்லா முஜாஹி... மேலும் பார்க்க