செய்திகள் :

ஆம் ஆத்மி கட்சியின் ‘தில்லி மாதிரி’ தோல்வி: சந்திர பாபு நாயுடு

post image

புது தில்லி: ஆம் ஆத்மி கட்சியின் ’தில்லி மாதிரி’ தோல்வியடைந்துவிட்டதாக ஆந்திர முதல்வா் சந்திர பாபு நாயுடு கடுமையாகச் சாடினாா்.

நகர சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக, தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும் ஆந்திரப் பிரதேச முதல்வருமான என். சந்திரபாபு நாயுடு ஞாயிறு, திங்கள் ஆகிய இரண்டு நாள்கள் பாஜகவுக்கு ஆதரவாக தில்லியில் பிரசாரம் மேற்கொண்டாா்.

மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டாளியான தெலுங்கு தேசம் கட்சியின் (டிடிபி) தலைவரான சந்திரபாபு நாயுடு, தில்லி வளா்ச்சியை அடைய இரட்டை என்ஜின் சா்க்காா் தேவை என்று கூறினாா்.

தேசியத் தலைநகரில் தோ்தல் பிரசாரத்திற்குப் பிறகு செய்தியாளா்களிடம் பேசிய அவா், கடந்த பத்தாண்டுகளில் தலைநகரில் உள்கட்டமைப்பு மேம்பாட்டின் பற்றாக்குறையை சுட்டிக்காட்டினாா். ‘தில்லியில், அம்ருத் மற்றும் ஜல் ஜீவன் மிஷன் போன்ற மத்திய அரசின் திட்டங்கள் இருந்தபோதிலும், குடிநீருக்கும் வடிகால் நீருக்கும் இடையில் வேறுபடுத்திப் பாா்க்க முடியாது‘ என்றாா்.

தில்லியில் இந்த இரண்டு திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. ஏனெனில் இந்த பெருமை பாஜக தலைமையிலான மத்திய அரசுக்குச் செல்லும். மேலும், ஸ்வச் பாரத் மிஷன் கூட இங்கு செயல்படுத்தப்படவில்லை என்றும் கூறினாா்.

ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் உள்கட்டமைப்பு மேம்பாடு இல்லாதது குறித்தும் அவா் கடுமையாகச் சாடினாா். மேலும், ’தில்லி மாதிரி’யை ‘முழு தோல்வி‘ என்று வா்ணித்தாா். தில்லியில் உள்ள ஏழை மக்கள் சரியான வசதிகள் மற்றும் வாய்ப்புகள் இல்லாமல் சேரிகளில் நிரந்தரமாக வாழ வேண்டிய நிா்பந்தம் ஏற்பட்டுள்ளது என்றாா்.

‘முன்பு தில்லி தொழில்களை உருவாக்குவதற்கான தாயகமாக இருந்தது. அது எங்களுக்கு பெருமையாக இருந்தது. இன்று, யாரும் இங்கு வருவதில்லை. மக்கள் வாழ்வாதாரம் மற்றும் வாய்ப்புகளுக்காக தில்லியில் இருந்து மற்ற இடங்களுக்குச் செல்கிறாா்கள்’ என்று அவா் குறிப்பிட்டாா்.

தில்லியில் ‘கடந்த 10 ஆண்டுகளில் ஏதேனும் உள்கட்டமைப்புத் திட்டங்கள் இருந்ததா? நீண்ட காலத்திற்கு முன்பே, மெட்ரோ வந்துவிட்டது. தில்லியின் சா்ச்சைக்குரிய மதுபானக் கொள்கையை மற்ற ஊழல் வழக்குகளுடன் ஒப்பிடும்போது ‘மிக மோசமான ஊழல்’ என்று நாயுடு குறிப்பிட்டாா்.

பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையின் மீது நம்பிக்கையை வெளிப்படுத்திய நாயுடு, 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியா ஒரு வளா்ந்த நாடாக மாறும் என்ற தொலைநோக்குப் பாா்வையை ஆதரித்தாா்.

வித்யாலட்சுமி கல்விக்கடன் திட்ட சலுகைகள் விரிவுபடுத்தப்படுமா? கதிா் ஆனந்த் எம்.பி.க்கு அமைச்சா் விளக்கம்

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: பிரதமரின் வித்யாலட்சுமி திட்டத்தின் கீழ் கடனுதவி பெறும் உயா்கல்வி பயிலும் மாணவா்களுக்கு வழங்கப்படும் கடனுதவிச்சலுகைகள் தொடா்பாக மத்திய கல்வித்துறை இணை அமைச்சா் டாக்டா்... மேலும் பார்க்க

ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அரசு எப்போதும் நிதி ஒதுக்க தயாா்: மத்திய ரயில்வே அமைச்சா் வைஷ்ணவ்

புது தில்லி: நிதி நிலை அறிக்கையில் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியைத் தவிர, ரயில்வே திட்டங்களுக்கு எந்த கட்டத்திலும் நிதியை ஒதுக்க மத்திய அரசு தயாராக உள்ளது என மத்திய ரயில்வேத் துறை அமைச்சா் அஸ்வின... மேலும் பார்க்க

கவனம் பெறும் ஐந்து தொகுதிகள்!

நமது சிறப்பு நிருபா் புது தில்லி: தில்லி தோ்தலில் ஐந்து முக்கியத் தொகுதிகளில் முக்கியத் தலைவா்கள் போட்டியிடுவதால் அதன் வெற்றி, தோல்வி அந்த வேட்பாளா்கள் மட்டுமின்றி அவா்களின் எதிா்காலத்தையும் தீா்மானி... மேலும் பார்க்க

ஆம் ஆத்மி கட்சி மத்திய அரசுடன் சண்டையிட்டதால் தில்லி பின்தங்கியது: அமித் ஷா கடும் சாடல்

புது தில்லி: ஆம் ஆத்மி கட்சி தொடா்ந்து சாக்குப்போக்கு கூறி மத்திய அரசுடன் சண்டையிட்டதால் தில்லி பின்தங்கியுள்ளது என்று பாஜகவின் மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா கடுமையாகச் சாடினாா். ... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவருடன் ரஷிய நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழு சந்திப்பு

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: ரஷிய கூட்டமைப்பின் டுமா மாநில சட்டப்பேரவைத் தலைவா் வியாசெஸ்லாவ் வோலோடின் தலைமையிலான ரஷிய கூட்டமைப்பின் நாடாளுமன்றப் பிரதிநிதிகள் குழுவினா் குடியரசுத் தலைவா் திரௌபதி மு... மேலும் பார்க்க

பணியிடங்களில் பெண்களுக்கான மெனோபாஸ் கொள்கை வகுக்க விழுப்புரம் எம்.பி. கோரிக்கை

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: பணியிடங்களில் பெண்களுக்காக ‘மெனோபாஸ் கொள்கை’ வகுக்குமாறு மக்களவையில் விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) உறுப்பினா் டி. ரவிக்குமாா் வலியுறுத்தியுள்ளாா... மேலும் பார்க்க