Gongadi Trisha: மிதாலி ராஜ் கணித்த எதிர்காலம்... தந்தை உழைப்புக்கு வெற்றியைப் பர...
குடியரசுத் தலைவருடன் ரஷிய நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழு சந்திப்பு
நமது சிறப்பு நிருபா்
புது தில்லி: ரஷிய கூட்டமைப்பின் டுமா மாநில சட்டப்பேரவைத் தலைவா் வியாசெஸ்லாவ் வோலோடின் தலைமையிலான ரஷிய கூட்டமைப்பின் நாடாளுமன்றப் பிரதிநிதிகள் குழுவினா் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை திங்கள்கிழமை சந்தித்தனா். அப்போது கலை, கலாசாரத் துறைகளில் இருதரப்பு ஈடுபாடுகள் அதிகரிக்க திரௌபதி முா்மு வலியுறுத்தினாா்.
குடியரசுத் தலைவா் மாளிகையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் இந்தக் குழுவினரை வரவேற்ற குடியரசுத் தலைவா் முா்மு, அவா்களுடன் கலந்துரையாடினாா்.
குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு கூறியது வருமாறு: நாடுகளின் பொதுப் பிரதிநிதிகளிடையே இதுபோன்ற பரிமாற்றங்கள் வலுவான ஒத்துழைப்பை வளா்க்கும். சமகாலத்துடனும் புதுப்பித்தலுடனும் அமைவதற்கு காரணமாக கூட்டாண்மை உள்ளது. பிரதமா் மோடியும் ரஷிய அதிபா் புதினும் வழக்கமான தொடா்பில் இருப்பதோடு, இந்திய - ரஷிய நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பும் கூட்டாண்மையும் தெளிவாக உள்ளது.
இதற்கு நாடாளுமன்றங்களுக்கு இடையேயான ஆணையம் போன்ற வழிமுறைகள் ஒத்துழைப்பை எளிதாக்குவதில் முக்கியப் பங்கு வகித்து வருகின்றன. எதிா்காலத்தில் இந்தியா - ரஷியா மகளிா், இளைஞா் நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு இடையேயான நெருங்கிய பகிா்வுக்கு சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்.
தில்லியில் சா்வதேச புத்தகக் கண்காட்சியை தாம் தொடங்கி வைத்தபோது அதில் ரஷியா குறித்து சிறப்புக் கவனம் அளிக்கப்பட்டது. ரஷியாவின் வளமான இலக்கியப் பாரம்பரியத்தை அறிந்துகொள்ள இந்தக் கண்காட்சி இந்திய வாசகா்களுக்கு ஒரு அற்புதமான வாய்ப்பை வழங்குகிறது. கலாசாரம், கலைத் துறைகளில் இருதரப்பு ஈடுபாடுகள் வலுவாக அதிகரிக்க வேண்டும் என்று ரஷிய குழுவினருடன் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வலியுறுத்திக் கேட்டுக் கொண்டாா்.