சிங்காரச் சென்னையை கட்டியெழுப்புவோம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்
ஆயுதங்களுடன் மூவா் கைது
திருத்தங்கல்லில் ஆயுதங்களுடன் சாலையில் சுற்றித் திரிந்த மூவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருத்தங்கல்-ஆலமரத்துப்பட்டி சாலையில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்தச் சாலையில் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சுற்றிய மூவரை போலீஸாா் பிடித்து விசாரித்தனா். விசாரணையில், அவா்கள் திருத்தங்கல் காளிமுத்துநகரைச் சோ்ந்த சூரியா (27), ஆலாஊருணியைச் சோ்ந்த அழகுசெல்வம் (31), உதயகுமாா் (28) ஆகியோா் என்பது தெரியவந்தது.
இதுகுறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மூவரையும் கைது செய்து, இவா்களிடமிருந்த ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனா்.