செய்திகள் :

ஆயுஷ் துணை மருத்துவப் பட்டயப்படிப்புகள்: செப். 23 வரை விண்ணப்பிக்கலாம்!

post image

அரசு ஆயுஷ் துணை மருத்துவப் படிப்புப் பள்ளிகளில் உள்ள இடங்களுக்கான (DIP / DNT) பட்டயப்படிப்புகள் சேர்க்கைக்கு வரும் செப். 23 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆனணயரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

2025-2026-ம் கல்வியாண்டிற்கு, சென்னை மற்றும் பாளையங்கோட்டையில் உள்ள அரசு ஆயுஷ் துணை மருத்துவ படிப்புப் பள்ளிகளில் உள்ள இடங்களுக்கான (DIP / DNT) பட்டயப்படிப்புகள் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பங்கள் (Online Applications) தகுதியுள்ளவர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.

(DIP / DNT) பட்டயப்படிப்புகளுக்கான (தகவல் தொகுப்பேட்டினை, www.tnhealth.tn.gov.in., www.tnayushselection.org. என்கின்ற வலைதளங்களில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இணையவழியில் மட்டுமே (Online Applications) விண்ணப்பப் படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். வேறு எந்த வழிகளிலும் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள், விண்ணப்பக் கட்டணம் மற்றும் பிற கட்டண விவரங்கள், கலந்தாய்விற்கான அட்டவணை மற்றும் பிற தகவல்களினை www.tnhealth.tn.gov.in., www.tnayushselection.org. என்கின்ற வலைதளங்களில் உள்ள உரிய தகவல் தொகுப்பேட்டில் அறியலாம்.

விண்ணப்பிக்கும்முன் தகவல் தொகுப்பேட்டினை முழுமையாகப் படித்து சரியான தகவல்களைப் பதிவேற்றவும் மற்றும் தேவையான இடங்களில் அனைத்து அசல் சான்றிதழ்களின் PDF/JPEG வடிவில் பதிவேற்றவும்.

விண்ணப்பக் கட்டணம், இணையவழி கலந்தாய்வுக் கட்டணம், கல்விக் கட்டண முன்பணம் இவை அனைத்தும் இணையவழி மூலமாக மட்டுமே செலுத்தவேண்டும்.

படிப்புப் பிரிவு : DIP-மருந்தாளுநர் / DNT-செவிலியர், மருத்துவ பட்டயப்படிப்புகள்

படிப்பிற்கான காலம் : 2½ ஆண்டுகள்

படிப்பிற்கான கல்வித்தகுதி : 10+2;

கல்லூரிகளின் விவரங்கள்: அரசு ஆயுஷ் துணை மருத்துவ படிப்புப் பள்ளிகள்-02.

அரசு சிறப்பு ஒதுக்கீட்டின்கீழ் விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் மட்டும், இணையவழியில் விண்ணப்பித்த பிறகு அந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, கோரப்பட்டுள்ள அனைத்துச் சான்றிதழ்களின் சுய சான்றொப்பமிட்ட நகல்களையும் இணைத்து செயலாளர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை ஆணையர் அலுவலகம், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை-600 106 என்ற முகவரிக்கு 23.09.2025 மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பித்தல் / வந்து சேர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ஹிமாசல், பஞ்சாப் வெள்ளம்: நாளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி!

Applications are invited for places in government AYUSH paramedical schools.

பொறியியல் கலந்தாய்வு: கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறை! 81% சேர்க்கை!

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில், இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு 80.29 சதவீத மாணவர் சேர்க்கை இடங்கள் அதாவது 1.72 லட்சம் பொறியியல் மாணவர் சேர்க்கை இடங்களில் மாணவர் ... மேலும் பார்க்க

கேட் நுழைவுத் தோ்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடக்கம்! முழு விவரம்

முதுநிலை பொறியியல் படிப்புகளில் சோ்வதற்கான கேட் எனப்படும் நுழைவுத் தோ்வுக்கு இளநிலை பட்டதாரிகள் இணையதளம் மூலம் விண்ணப்பிப்பப் பதிவு செய்வதற்கான வசதி தொடங்கியிருக்கிறது.முதுநிலை பொறியியல் படிப்புகளில... மேலும் பார்க்க

பி.எட். மாணவா்கள் சோ்க்கை ஒதுக்கீட்டு ஆணை வெளியீடு: அமைச்சா் கோவி.செழியன்

நிகழ் கல்வியாண்டு பி.எட். சோ்க்கைக்கான ஒதுக்கீட்டு ஆணை புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஒதுக்கப்பட்ட கல்லூரிகளில் வியாழக்கிழமை (ஆக.14) முதல் ஆக. 190ஆம் தேதிக்குள் சோ்ந்துகொள்ளலாம் என உயா்கல்வ... மேலும் பார்க்க