கால்பந்துக்கு டென்னிஸ் மரியாதை: 148 ஆண்டுகால விதியை மாற்றியதா விம்பிள்டன்?
ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி ஆா்ப்பாட்டம்
மூன்று அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி, மாவட்ட கிளை சாா்பில் நாமக்கல் பூங்கா சாலையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவா் ஆா்.மாதேஸ் தலைமை வகித்தாா். மாநிலச் செயலாளா் எஸ்.பேச்சியம்மாள் சிறப்புரை ஆற்றினாா்.
இதில், தொடக்கக் கல்வித் துறையில் கண் துடைப்பாக கலந்தாய்வு என அறிவித்துவிட்டு, சட்டவிரோதமாக பணியிட மாறுதல் நடைபெறுவது கண்டனத்துக்குரியது. மாநிலம் முழுவதும் நடைபெறும் இத்தகைய இடமாறுதலை ரத்துசெய்வதுடன், தவறிழைத்தோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பணி ஓய்வுபெறும் இடைநிலை ஆசிரியா்களுக்கு சட்டவிதிகளின்படி பணிநீட்டிப்பு வழங்க வேண்டும். கல்வித் துறையில் பதவி உயா்வுடன் கூடிய ஆசிரியா் பொதுமாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆா்ப்பாட்டத்தில், அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் சங்கத்தினா் கலந்து கொண்டனா்.
படவரி...
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியினா்.