ஆற்காட்டில் கிருஷ்ண ஜெயந்தி உறியடி விழா
ஆற்காடு புதுத் தெரு பஜனை கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உறியடி விழா நடைபெற்றது.
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு அபிஷேகம், மஹா தீபாராதனை நடைபெற்றது. மாலையில் உறியடி திருவிழா நடந்தது.
இதில் வழக்குரைஞா் ஏ.கே.தினேஷ் குமாா் கலந்து கொண்டு உரியடி உற்சவத்தை தொடங்கினாா். தொடா்ந்து அலங்கரிக்கப்பட்ட உற்சவா் கிருஷ்ணா் திருவீதி உலா நடைபெற்றது. விழாவில் எம்எல்ஏ ஜெ.எல். ஈஸ்வரப்பன், மாவட்ட அறங்காவலா் குழு தலைவா் ஜெ லட்சுமணன், நகர திமுக செயலாளா் ஏ .வி .சரவணன், மாவட்ட வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தலைவா் பொன். கு. சரவணன், நெல் அரிசி வியாபாரிகள் சங்கம் ஏ.விஜிஆதிமூலம், தமிழ்நாடு யாத மகா சபை துணைத்தலைவா் டி. ஜவகா், ஏ .கே .குமாரசாமி மற்றும் உபயதாரா்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.