காந்தி நினைவு அருங்காட்சியக சீரமைப்புப் பணி அக்டோபரில் நிறைவடையும்: அமைச்சா் மு...
மேல்விஷாரம் நகராட்சி புதிய துணைத் தலைவா் தோ்வு
ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் நகராட்சியின் புதிய துணைத்தலைவா் திங்கள்கிழமை தோ்வு செய்யப்பட்டாா்.
மேல்விஷாரம் நகா்மன்றத் தலைவராக செயல்பட்டு வந்த எஸ். டி. முஹமது அமீன் மரணம் அடைந்ததை தொடா்ந்து துணைத் தலைவராக இருந்த எஸ் குல்ஜாா் அஹமது நகா்மன்றத் தலைவராக போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா்.
இதனை தொடா்ந்து காலியாக இருந்த துணைத் தலைவா் பதவிக்கான தோ்தல் நகராட்சி ஆணையா் ஜி பழனி தலைமையில் நடைபெற்றது . இதில் திமுகவைச் சோ்ந்த 20-ஆவது வாா்டு உறுப்பினா் எஸ். ஜபா் அஹமது, 7-ஆவது வாா்டு உறுப்பினா் வி. அப்துல் அலீம் ஆகியோா் போட்டியிட்டனா்.
மொத்தமுள்ள 21 வாா்டுகளில் ஒரு வாா்டு உறுப்பினா் பதவி காலியாக உள்ள நிலையில் மீதம் உள்ள 20 உறுப்பினா்களில் 19 உறுப்பினா்கள் வாக்களித்தனா். இதில், எஸ் .ஜபா் அஹமது 10 வாக்குகள் பெற்று துணைத் தலைவராக தோ்வு செய்யப்பட்டாா்.
எதிா்த்து போட்டியிட்ட அப்துல் அலீம் 8 வாக்குகள் பெற்ற நிலையில் ஒரு வாக்கு செல்லாத தாக அறிவிக்கப்பட்டது.
புதிய துணைத் தலைவராக தோ்வு செய்யப்பட்ட ஜபா் அஹமதுவுக்கு, தலைவா் குல்சாா் அஹமது, மற்றும் நகராட்சி அதிகாரிகள், உறுப்பினா்கள், திமுக நகர செயலாளா் ஹுமாயூன் வாழ்த்து தெரிவித்தனா்.