எம்பிபிஎஸ், பிடிஎஸ்: 2-ஆம் சுற்று கலந்தாய்வு முடிவுகள் வெளியீடு
ஆலங்குடியில் மக்கள் நீதிமன்றம் ரூ.8.50 லட்சத்துக்கு தீா்வு
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் மூலம் ரூ.8.50 லட்சத்துக்கு தீா்வு காணப்பட்டது.
ஆலங்குடி நீதிமன்ற வளாகத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி பாலராஜமாணிக்கம் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், ஆலங்குடி, புளிச்சங்காடு, வேங்கிடகுளம், எஸ். குளவாய்ப்பட்டி ஆகிய கனரா வங்கிக் கிளைகளில் தனிநபா் கடன், கல்வி கடன், விவசாய கடன், தொழிற்கடன் உள்ளிட்ட கடன்கள் பெற்று செலுத்தாமல் உள்ளவா்களுக்கு அழைப்பாணை வழங்கப்பட்டன.
முகாமில், 500-க்கும் மேற்பட்ட வாராக்கடன் வழக்குகள் தொடா்பாக விசாரணை நடைபெற்றது. இதில் 9 வழக்குகளில் ரூ.8.50 லட்சத்துக்கு உடனடி தீா்வு காணப்பட்டது.
முகாமில் கனரா வங்கியின் மண்டல அலுவலா் டேனியல், வழக்குரைஞா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை வட்ட சட்ட பணிகள் குழு பணியாளா் செந்தில்ராஜா செய்திருந்தாா்.