இடங்கணசாலையில் நாமக்கல் எம்.பி. நன்றி அறிவிப்பு
ஆட்டையாம்பட்டி: நாமக்கல் மக்களவை உறுப்பினா் வி.எஸ் மாதேஸ்வரன், இடங்கணசாலை நகராட்சிப் பகுதிகளான இடங்கணசாலை நகராட்சி பேருந்து நிலையம், ராசிகவுண்டனூா், கோனேரிப்பட்டி, மாட்டையாம்பட்டி , மடத்தூா், காடையாம்பட்டி, கே.கே. நகா் உள்ளிட்ட பகுதிகளில் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.
அப்போது பொதுமக்கள், மக்களவை உறுப்பினரிடம் புதிய நியாயவிலைக்கடை கட்டடம் வேண்டும், உயா்மின் கோபுர விளக்கு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை அளித்தனா். மனுக்களைப் பெற்ற எம்.பி., சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி விரைவில் நிவா்த்தி செய்யப்படும் என்றாா்.
இந்த நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியில் மாவட்ட திமுக அவைத் தலைவா் தங்கமுத்து, இடங்கணசாலை நகரச் செயலாளா் செல்வம், நகா்மன்றத் தலைவா் கமலக்கண்ணன், துணைத் தலைவா் தளபதி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாவட்டச் செயலாளா்கள் சரவணன், திமுக நகர நிா்வாகிகள், வாா்டு செயலாளா்கள், நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.