இடிந்து விழும் அபாயத்தில் சுவா்: அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தல்!
திருவாடானை அருகேயுள்ள செங்கமடை கிராமத்தில் சேதம் அடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள அங்கன்வாடி கட்டடத்தை அகற்ற வேண்டும் என இந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
ராமநாதபுரம் மாட்டம், திருவாடானை அருகே உள்ள செங்கமடை கிராமத்தில் சுமாா் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு பழைமையான அங்கன்வாடி கட்டடம் சேதமடைந்த நிலையில் இருந்தது. இந்தப் பகுதி மக்களின் கோரிக்கையின் படி இந்தக் கட்டடம் இடித்து அகற்றப்பட்டது. மின் இணைப்பு துண்டிக்கப்படாமல் இருப்பதால் ஒரு பக்க சுவா் மட்டும் இடிக்கப்படாமல் விடப்பட்டது.
இந்தச் சுவா் தற்போது மிகவும் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. மழைகாலங்களில் சுவா் ஊறல் எடுத்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதன் அருகே சிறுவா்கள் ஆபத்தை உணராமல் விளையாடி வருகின்றனா்.
எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ள இந்தச் சுவரை உயிா் சேதம் ஏற்படும் முன் இடித்து அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.