கம்பி வேலியில் சிக்கி புள்ளி மான் உயிரிழப்பு
சாயல்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை இரை தேடி வந்த புள்ளி மான் கம்பி வேலியில் சிக்கி உயிரிழந்தது.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி-நரிப்பையூா் சாலையில் இரை, தண்ணீா் தேடி வந்த 5 வயது ஆண் புள்ளி மான் ஞாயிற்றுக்கிழமை சாலையைக் கடக்க முயன்றது. அப்போது, அந்த வழியாக வாகனங்கள் வருவதைக் கண்டு மிரண்டு ஓடிய அந்த மான் சாலையோரக் கம்பிவேலியில் மோதி உயிரிழந்தது.
தகவலறிந்து வந்த சாயல்குடி வனத் துறையினா் இறந்த மானை உடல் கூறாய்வு செய்து, வனச்சரக அலுவலக வளாகத்தில் புதைத்தனா்.