மின்னல் பாய்ந்ததில் 10 ஆடுகள் உயிரிழப்பு!
கடலாடி அருகே ஞாயிற்றுக்கிழமை மின்னல் பாய்ந்ததில் 10 ஆடுகள் உயிரிழந்தன.
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி, முதுகுளத்தூா் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்தது. இந்த நிலையில், கடலாடி ஒன்றியம் ஏ.புனவாசல் அருகேயுள்ள சிறுகுடி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி செந்தில்வேல் 10 வெள்ளாடுகளை வளா்ந்து வந்தாா்.
வழக்கம் போல மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றாா். அப்போது, அந்தப் பகுதியில் பெய்த மழைக்கு ஆடுகள் மரத்தின் கீழே ஒதுங்கின.
அப்போது மின்னல் பாய்ந்ததில் 10 ஆடுகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.
இதுகுறித்து தகவலறிந்து வந்த வருவாய்த் துறையினா் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினா். பின்னா், அந்த ஆடுகளின் உடல்களை கால்நடை மருத்துவா் கூறாய்வு செய்து புதைத்தனா். ஆடுகள் இறந்த நிலையில், அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என செந்தில்வேல் கோரிக்கை விடுத்தாா்.