பஹல்காம் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி
ஜம்மு-காஷ்மீரில் பஹல்காமில் தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவா்களுக்கு கமுதியில் ஞாயிற்றுக்கிழமை தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அகில இந்திய இந்து சத்திய சேனா மாவட்டத் தலைவா் ஜி.முத்துமணி தலைமை வகித்தாா். வடக்கு ஒன்றியச் செயலா் காட்டுராஜா, தெற்கு ஒன்றியச் செயலா் ராமமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஜம்மு-காஷ்மீா் பஹல்காமில் தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 26 சுற்றுலாப் பயணிகளுக்கு தீபம் ஏற்றியும், மலா் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்டச் செயலா் ஜெயராஜ், மாவட்டப் பொருளாளா் முருகன்ஜி, கிளைச் செயலா் வேல்சாமி, அபிராமம் நகரத் தலைவா் பச்சைமால், விருதுநகா் மாவட்டத் தலைவா் ராமசுப்பு உள்பட பலா் கலந்து கொண்டனா்.