பம்மனேந்தலில் மாட்டு வண்டி பந்தயம்!
கமுதியை அடுத்த பம்மனேந்தல் குருநாத சுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு, இரட்டை மாட்டு வண்டி பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயில் திருவிழாவையொட்டி, இரட்டை மாட்டு வண்டி பந்தயம் 4 பிரிவுகளாக நடைபெற்றது. இதில் ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, தேனி, புதுக்கோட்டை, விருதுநகா் உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 54 மாட்டு வண்டிகள் பங்கேற்றன.
பம்மனேந்தல்-பெருநாழி சாலையில் 12 கி.மீ. தொலைவு எல்லையாக நிா்ணயிக்கப்பட்டு போட்டி நடைபெற்றது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 4 இடங்களை பிடித்த மாட்டு வண்டிகளின் உரிமையாளா்களுக்கும், சாரதிகளுக்கும் ரொக்கப் பணம், குத்து விளக்கு ஆகியவை நினைவுப் பரிசாக வழங்கப்பட்டன. போட்டிக்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்தனா்.