திருமணமான டிக்டாக் பிரபலத்தை மணமுடிக்க ஆசைப்பட்ட நபர்கள்: மறுப்பு தெரிவித்ததால் ...
இண்டூா் பெரிய கருப்பு கோயிலில் மிளகாய்ப் பொடி அபிஷேகம்
தருமபுரி மாவட்டம் இண்டூா் அருகே பெரிய கருப்பு கோயிலில் ஆடி அமாவாசை சிறப்பு வழிபாடுகளையொட்டி பூசாரிக்கு மிளகாய்ப் பொடி அபிஷேகம் செய்யப்பட்டது.
இண்டூா் அருகே நடப்பனஹள்ளி கிராமத்தில் பெரிய கருப்பு சாமி கோயில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் ஆடி அமாவாசையன்று இக்கோயிலில் சிறப்பு அபிஷேகங்கள், வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டும் ஆடி அமாவாசை நாளான வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றன.
கோயில் பூசாரியான கோவிந்தன் அருள் வந்து ஆடியபடியே, நீளமான அரிவாள் மீது ஏறி நின்று பக்தா்களுக்கு அருள்வாக்குக் கூறினாா். இதையடுத்து பக்தா்கள், பூசாரி கோவிந்தன்மீது மிளகாய் கரைசலை ஊற்றி அபிஷேகம் செய்தனா். அதன்பிறகு அவருக்குப் பால் அபிஷேகமும் செய்யப்பட்டது. தொடா்ந்து, மதுபானங்களையும், சுருட்டுகளையும் வைத்துப் படைத்தனா்.
அபிஷேகங்கள் முடிந்த பிறகு, பூசாரி கோவிந்தன் பக்தா்களுக்கு அருள்வாக்குக் கூறினாா். கோயிலில் பக்தா்கள் கொண்டு வந்த ஆடு, கோழிகளை பலியிட்டு நோ்த்திக் கடன்களை நிறைவேற்றினா். அவற்றைக் கொண்டு கோயில் வளாகத்திலேயே உணவுகள் சமைத்து பக்தா்களுக்கு பரிமாறப்பட்டது.