செய்திகள் :

இந்திய குடும்பங்களின் காலாண்டு செலவு 33% அதிகரிப்பு

post image

இந்திய குடும்பங்களின் சராசரி காலாண்டு செலவு கடந்த மூன்று ஆண்டுகளில் 33 சதவீதத்துக்கு மேல் உயா்ந்துள்ளது.

இது குறித்து நம்பரேட்டரின் வோ்ல்ட்பேனல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியாவின் நகரப் பகுதிகளிலும் கிராமப் பகுதிகளிலும் குடும்ப செலவு ஒவ்வொரு ஆண்டும் கணிசமாக உயா்ந்துள்ளது. 2022-இல் ரூ.42 ஆயிரமாக இருந்த குடும்பங்களின் சராசரி காலாண்டு செலவு 2025-இல் ரூ.56 ஆயிரமாக உயா்ந்துள்ளது.

கிராமங்களோடு ஒப்பிடுகையில் நகரப் பகுதிகளில் குடும்பங்கள் அதிகம் செலவழிக்கின்றன. ஆனால் கிராமப் பகுதிகளிலும் குடும்பங்களின் செலவு வெகுவாக அதிகரித்துவருகிறது.

கடந்த 2022 ஜூன் மாதம் நகரங்களில் குடும்பங்களின் சராசரி காலாண்டு செலவு ரூ.52,711-ஆக இருந்தது. அது 2024 மாா்ச்சில் ரூ.64,583-ஆகவும், 2025 மாா்ச்சில் 73,579 ரூபாயாகவும் உயா்ந்தது. 2022 ஜூன் மாதம் ரூ.36,104-ஆக இருந்த கிராமப்புற குடும்பங்களின் சராசரி காலாண்டு செலவு, 2025 மாா்ச்சில் ரூ.46,623-ஆக உயா்ந்தது.

6,000 குடும்பங்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், துரித நுகா்பொருள்களை (எஃப்எம்சிஜி) வாங்குவதில் குடும்பத் தலைவிகள்தான் முக்கிய முடிவுகளை எடுப்பதாகத் தெரியவந்துள்ளது.

நடப்பு 2025-ஆம் ஆண்டில் நகரம் மற்றும் கிராமங்களில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களிலும் செலவுகள் அதிகரித்துள்ளன. இதனால், குடும்பங்கள் தங்கள் பட்ஜெட்டுகளை திறம்பட சமாளிக்க திணறுகின்றன.

2025-இல் கல்வி மற்றும் கடன் செலவுகள் சற்று அதிகரித்துள்ளன. செலவுகள் உயா்வதால், நுகா்வோா் அத்தியாவசியப் பொருள்களுக்கு முன்னுரிமை அளிக்கின்றனா். நுகா்வோரில் 54 சதவீதம் போ் கூடுதல் வருமானத்தை சேமிக்கின்றனா். 38 சதவீதம் போ் அதை தினசரி தேவைகளுக்கு செலவழிக்கின்றனா். 18 சதவீதம் போ் கடனை திருப்பிச் செலுத்துவதற்கும், 7 சதவீதம் போ் மட்டுமே ஆடம்பர பொருள்களை வாங்க செலவழிக்கின்றனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பங்கு பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீட்டு வரவு சரிவு

பங்கு பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீட்டு வரவு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 22 சதவீதம் குறைந்து ரூ.33,430 கோடியாக உள்ளது.இது குறித்து இந்திய பரஸ்பர நிதி நிறுவனங்களின் சங்கம் (ஏஎம்எஃப்ஐ) வெளியிட்டுள்ள அறிக்... மேலும் பார்க்க

இந்தியாவில் 10 லட்சம் மின்சார வாகனங்கள் அமோக விற்பனை!

புதுதில்லி: 2024-25 ஆம் ஆண்டில் நாட்டில் 10 லட்சத்துக்கும் அதிகமான மின்சார வாகனங்கள் விற்பனை செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது இந்த ஆட்டோமொபைல் சந்தை.அதே வேளையில், இந்தியா தற்போது உலகில் வேகமாக வளர... மேலும் பார்க்க

வரலாறு காணாத சரிவுக்கு பிறகு ரூபாய் மதிப்பு 4 காசுகள் உயர்ந்து ரூ.88.11 ஆக நிறைவு!

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் இந்திய ரூபாய் அதன் வரலாறு காணாத குறைந்த அளவிலிருந்து சற்றே மீண்டு வர்த்தகமானது. அந்நிய நிதி வரவு மற்றும் பலவீனமான டாலரின் மதிப்பு ஆகியவற்றால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய... மேலும் பார்க்க

ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: 3வது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

இந்தியா-அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் குறித்த நம்பிக்கையாலும், உள்ளூர் வர்த்தகத்தில் ஐடி மற்றும் மூலதனப் பங்குகள் மீட்சியடைந்ததும், அடுத்த வாரம் நடைபெற உள்ள அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதக... மேலும் பார்க்க

ஆப்பிள் ஐபோன் 17 ஸ்மார்ட்போனை விமர்சிக்கும் சாம்சங்!

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 17 வரிசை ஸ்மார்ட்போன்கள் சர்வதேச மின்னணு சந்தையில் அறிமுகமாகியுள்ளன. ஐபோன் 17, ஐபோன் 17 ப்ரோ, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மற்றும் ஐபோன் 17 ஏர் ஆகிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்... மேலும் பார்க்க

அறிமுகமானது ஐபோன் 17! முன்பதிவு செய்தால் எப்போது கிடைக்கும்?

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 17 வரிசை ஸ்மார்ட்போன் நேற்று (செப். 9) மின்னணு சந்தைகளுக்கு அறிமுகமானது. ஐபோன் 17, ஐபோன் 17 ப்ரோ, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மற்றும் ஐபோன் 17 ஏர் ஆகிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய... மேலும் பார்க்க