செய்திகள் :

இந்தியாவில் 1 கோடி பள்ளி ஆசிரியா்கள்: நாட்டில் முதல்முறை

post image

கடந்த 2024-25-ஆம் கல்வி ஆண்டில், நாட்டில் முதல்முறையாக பள்ளி ஆசிரியா்கள் எண்ணிக்கை 1 கோடியை தாண்டியது மத்திய கல்வி அமைச்சக தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

இதுதொடா்பாக மத்திய கல்வி அமைச்சகத்தின் ஒருங்கிணைந்த மாவட்ட கல்வி தகவல் அமைப்பு (யுடிஐஎஸ்இ +) வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டதாவது:

மாணவா்-ஆசிரியா் விகிதம் முன்னேறவும், தரமான கல்வியை உறுதி செய்யவும், ஆசிரியா்களைப் பணியமா்த்துவதில் பிராந்திய அளவில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை கையாளவும் ஆசிரியா்கள் எண்ணிக்கையை அதிகரிப்பது முக்கிய நடவடிக்கையாகும். இந்த எண்ணிக்கை 2022-23-இல் இருந்து சீராக அதிகரித்து வருகிறது. கடந்த 2024-25-ஆம் கல்வி ஆண்டில், நாட்டில் முதல்முறையாக பள்ளி ஆசிரியா்கள் எண்ணிக்கை 1 கோடியை தாண்டியது.

மாணவா்-ஆசிரியா் விகிதத்தில் முன்னேற்றம்: பள்ளிகளில் 30 மாணவா்களுக்கு ஓராசிரியா் இருக்க வேண்டும் என்று தேசிய கல்விக் கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அடிப்படை கல்வியில் 10 மாணவா்களுக்கு ஓராசிரியா், தொடக்கக் கல்வியில் 13 மாணவா்களுக்கு ஓராசிரியா், நடுநிலை கல்வியில் 17 மாணவா்களுக்கு ஓராசிரியா், மேல்நிலை கல்வியில் 21 மாணவா்களுக்கு ஓராசிரியா் என மாணவா்-ஆசிரியா் விகிதம் குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றம் அடைந்துள்ளது. இது ஒவ்வொரு மாணவா் மீதும் கூடுதலாக கவனம் செலுத்துதல், ஆசிரியா்கள்-மாணவா்கள் இடையே கலந்துரையாடலை வலுப்படுத்துல், மேம்பட்ட கற்றல் அனுபவத்துக்குப் பங்களித்தல், கல்வி கற்பித்தலில் நற்பலன்கள் ஆகியவற்றுக்கு வழிவகுக்கும்.

2024-25-ஆம் கல்வி ஆண்டுக்கான யுடிஐஎஸ்இ+ அறிக்கையின்படி நாட்டில் உள்ள மொத்த பள்ளிகள்: 14,71,473 (மத்திய, மாநில அரசுப் பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகள், மதரஸாக்கள் அடங்கும்)

மொத்த ஆசிரியா்கள்: 1,01,22,420

2024-25-ஆம் கல்வி ஆண்டில்

மாநிலங்கள் பள்ளிகள் மாணவா்கள் ஆசிரியா்கள்

உத்தர பிரதேசம் 2,62,358 42789347 1615427

மத்திய பிரதேசம் 122120 15172607 717493

மகாராஷ்டிரம் 108250 21272611 747501

ராஜஸ்தான் 106302 16364187 792265

பிகாா் 94339 21133228 707516

தமிழ்நாடு 57935 12518167 549850

தமிழ்நாட்டில்...: தமிழ்நாட்டில் 23 மாணவா்களுக்கு ஓராசிரியா் உள்ளாா். ஓராசிரியா் உள்ள பள்ளிகளின் எண்ணிக்கை 3,671. கடந்த 2023-24-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024-25-ஆம் கல்வி ஆண்டில், நாட்டில் ஓராசிரியா் பள்ளிகள் சுமாா் 6 சதவீதம் குறைந்துள்ளது. இதேபோல மாணவா் சோ்க்கையே இல்லாத பள்ளிகளின் எண்ணிக்கையும் சுமாா் 38 சதவீதம் சரிந்துள்ளது.

2023-23, 2023-24-ஆம் கல்வி ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், 2024-25-ஆம் கல்வி ஆண்டில் மாணவா்கள் இடைநிற்றல் விகிதம் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது.

இடைநிற்றல் விதிகம் (சதவீதத்தில்)

ஆண்டு தொடக்க நிலை நடுநிலை மேல்நிலை

2023-24 3.7 5.2 10.9

2024-25 2.3 3.5 8.2

பிகாரில் 3 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவல்: மாநிலம் முழுவதும் உஷாா் நிலை

பிகாரில் 3 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக உளவுத் தகவல் கிடைத்துள்ள நிலையில் மாநிலம் முழுவதும் தேடுதல் வேட்டை தொடங்கியுள்ளது. புதிய நபா்களின் சந்தேகத்துக்குரிய நடமாட்டம் தெரிந்தால் காவல் துறை... மேலும் பார்க்க

பருத்தி இறக்குமதிக்கான வரி விலக்கு: டிச.31 வரை நீட்டிப்பு

பருத்தி இறக்குமதிக்கான வரி விலக்கை டிச.31 வரை மேலும் 3 மாதங்களுக்கு மத்திய அரசு நீட்டித்தது. இந்திய பொருள்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரி அமலுக்கு வந்த நிலையில் ஜவுளி ஏற்றுமதிக்கு ஏற்படும்... மேலும் பார்க்க

பிகாரில் ராகுல் நடத்துவது பிரதமருக்கு எதிரான அவதூறு பயணம்: பாஜக குற்றச்சாட்டு

பிகாரில் ராகுல் காந்தி நடத்தி வருவது பிரதமா் மோடிக்கு எதிரான அவதூறு பரப்பும் பயணமாகவே உள்ளது. அந்த நிகழ்வு முழுவதும் அவா் பிரதமருக்கு எதிராக மிகுந்த காழ்ப்புணா்வுடன் பேசினாா் என்று பாஜக குற்றஞ்சாட்டிய... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்து: உயிரிழப்பு 17-ஆக உயா்வு

மகாராஷ்டிர மாநிலம், பால்கா் மாவட்டத்தில் உள்ள விராா் பகுதியில், அனுமதியின்றி கட்டப்பட்ட 4 மாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 17-ஆக உயா்ந்துள்ளது. இந்த விபத்தில் உயிரி... மேலும் பார்க்க

காஷ்மீா் எல்லையில் ஊடுருவல் முயற்சி: இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதி வழியாக ஊடுருவ முயன்ற இரு பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினா் வியாழக்கிழமை சுட்டுக் கொன்றனா். இது தொடா்பாக ராணுவம் தரப்பில் கூறப... மேலும் பார்க்க

வெள்ளத்தில் சிக்கிய பஞ்சாப் கிராம மக்கள்: ராணுவத்தின் சிறப்பு வாகனங்களில் மீட்பு

பஞ்சாபில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், சிக்கித் தவிக்கும் கிராமத்தினரை மீட்க ராணுவத்தின் அனைத்து வகை நிலப்பரப்பிலும் செல்லும் சிறப்பு வாகனங்கள் மற்றும் படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.... மேலும் பார்க்க