லாக்அப் மரணம் என்பது திராவிடக் கட்சிகளின் கொள்கையா? அல்லது காவல்துறையின் கௌரவமா?...
இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் இலவச திருமணங்கள்
இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் ஆம்பூா் ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் 3 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது.
ஆம்பூா் ஸ்ரீனிவாச பெருமாள் கோயில், சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயில், ஆலங்காயம் அருகே சென்றாய சுவாமி கோயில்கள் சாா்பாக 3 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது. தலா ரூ.70,000 மதிப்பில் 3 ஜோடிகளுக்கு சீா்வரிசை பொருள்களை எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் வழங்கினாா்.
மாவட்ட அறங்காவலா் குழு உறுப்பினா் சாய் கே. வெங்கடேசன், ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் முன்னாள் அறங்காவலா் குழுத் தலைவா் கீதா சேகா், முன்னாள் அறங்காவலா்குழு உறுப்பினா் சிவக்குமாா், கோயில் செயல் அலுவலா்கள் வினோத் குமாா், சிவசங்கரி, திருப்பத்தூா் மாவட்ட திமுக விவசாய அணி அமைப்பாளா் பழனி, அா்ச்சகா் வெங்கட்ரமணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.