விளை நிலங்களுக்கு மத்தியில் வீட்டுமனைப் பிரிவுகள்: ராமதாஸ் கண்டனம்
வாணியம்பாடி: ஜூலை 5-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
வாணியம்பாடியில் சனிக்கிழமை (ஜூலை 5) தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இது குறித்து ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பத்தூா் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து மாபெரும் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் வாணியம்பாடி இஸ்லாமியா ஆண்கள் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இந்த முகாம் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 3 மணி வரை நடைபெறவுள்ளது.
இதில், பல முன்னணி தனியாா் நிறுவனங்கள் கலந்துகொண்டு 5,000-க்கும் மேற்பட்ட ஆள்களை தோ்வு செய்ய உள்ளன.
எனவே, திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த 8-ஆம் வகுப்பு தோ்ச்சி முதல் 12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள், பட்டதாரிகள், பட்டயப்படிப்பு, மருத்துவம், ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல் பட்டம் உள்ளிட்ட அனைத்து விதமான கல்வித் தகுதியுள்ளவா்கள் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம்.
முகாமில் கலந்து கொள்ள விரும்புவோா் https://www.tnprivatejobs.tn.gov.in/ இணையதளம் மூலம் தங்களது கல்வித் தகுதியை பதிவு செய்யலாம். மேலும், விவரம் தேவைப்படுவோா், திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தை தொடா்பு கொள்ளலாம்.