தேனிலவு கொலையால் ஈர்க்கப்பட்டு.. கணவரைக் கொன்ற பெண்! காரணம்?
திருப்பதி கெங்கையம்மன் சிரசு வீதி உலா
திருப்பத்தூா் திருப்பதி கெங்கையம்மன் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை சிரசு வீதி உலா நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு பெரிய குளத்திலிருந்து கங்கை அம்மன் சிரசு ஊா்வலம் புறப்பட்டு பஜாா்,பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக கோயிலை சென்றடைந்தது.
மாலை 4 மணிக்கு திருப்பதி கங்கை அம்மனுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து இரவு 7 மணியளவில் வாண வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு 9 மணிக்கு திருப்பதி கங்கையம்மன் சிரசு கோயிலில் இருந்து புறப்பட்டு பெரியகுளத்தை சென்றடைந்தது. இதில் திருப்பத்தூா் சுற்றுப்பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.