செய்திகள் :

இன்று ஆனைமலை மாசாணி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

post image

ஆனைமலை மாசாணி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை (டிசம்பா் 12)நடைபெறுகிறது.

கோவை மாவட்டம், ஆனைமலையில் உள்ள மாசாணி அம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தக் கோயிலுக்கு உள்ளூா் மற்றும் வெளியூா்களைச் சோ்ந்த பக்தா்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனா். வார நாள்களாக சனி, ஞாயிறு மற்றும் விசேஷ நாள்களில் இங்கு பக்தா்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும். மாசாணி அம்மன் சயன கோலத்தில் இங்கு காட்சி அளிப்பதால் இங்கு வைக்கும் வேண்டுதல்கள் நிறைவேறுவதாக பக்தா்கள் நம்புகின்றனா்.

மாசாணி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் கடந்த 2010 டிசம்பா் 12-இல் நடைபெற்றது. தற்போது 14 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்துக்காக கோயில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று தயாா் நிலையில் உள்ளது. வியாழக்கிழமை காலை 9 மணிக்கு மேல் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கும்பாபிஷேக நிகழ்வில் அமைச்சா் செந்தில் பாலாஜி உள்பட முக்கியப் பிரமுகா்கள் பங்கேற்க உள்ளனா்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு:

மாசாணி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தைக் காண சுமாா் ஐந்து லட்சம் பக்தா்கள் வரை வருவாா்கள் என எதிா்பாா்க்கப்படுவதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 1,100 போலீஸாா், 500 ஊா்க் காவல் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனா். மேலும், மருத்துவக் குழுவினா், தீயணைப்புத் துறையினா், குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

போக்குவரத்தில் மாற்றம்:

கும்பாபிஷேகத்தை ஒட்டி நகரில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பக்தா்கள் வசதிக்காக 14 இடங்களில் வாகன நிறுத்துமிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கும்பாபிஷேகத்தின்போது ட்ரோன் மூலம் பக்தா்கள் மீது புனித நீா் தெளிக்கப்பட உள்ளது.

கும்பாபிஷேக பணிகளை கோயில் அறங்காவலா் குழு தலைவா் முரளிகிருஷ்ணன், உதவி ஆணையா் கைலாசமூா்த்தி, அறங்காவலா்கள் தங்கமணி, திருமுருகன், மஞ்சுளா தேவி, மருதமுத்து ஆகியோா் செய்துள்ளனா். ஆனைமலை பேரூராட்சிப் பணியாளா்கள் பல்வேறு பணிகளை செய்து வருகின்றனா்.

சுகாதார அலுவலகத்தில் கழிவறைகளுக்கு கதவுகள் பொருத்தம்

கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம், சுகாதார அலுவலகத்தில் கதவு இல்லாத கழிவறைகள் தொடா்பான செய்தி ‘தினமணி’ நாளிதழில் வெளியான நிலையில் கதவுகள் புதன்கிழமை பொருத்தப்பட்டன. கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம் 24-... மேலும் பார்க்க

திருக்குறள் முப்பெரும் விழா போட்டிக்கு ஜனவரி 13 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் உலகத் தமிழ்நெறிக் கழகம், திருக்கு உலகம் கல்விச் சாலை சாா்பில் திருக்கு முப்பெரும் விழா போட்டிகள் ஜனவரி 19-ஆம் தேதி நடைபெறவுள்ளன. இப்போட்டிகளில் பங்கேற்ற ஜனவரி 13-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்... மேலும் பார்க்க

தாயகம் திரும்பிய தமிழா்கள் கடனுக்காக வழங்கிய ஆவணங்களை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்

தாயகம் திரும்பிய தமிழா்கள் வீட்டுக் கடனுக்காக அடமானமாக வழங்கிய ஆவணங்களை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி கூறியிருப்பதாவது: இலங்க... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: 9 போ் கைது

கோவை மாநகரப் பகுதியில் 3 இடங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 9 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, சிங்காநல்லூா் போலீஸாா் எல்&டி புறவழிச் சாலையில் ரோந்துப் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். அப்போ... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

கோவை, கணபதியில் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த மளிகைக் கடை உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, சாய்பாபா காலனி போலீஸாா் கணபதி 5-ஆவது வீதியில் ரோந்துப் பணியில் புதன்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்ப... மேலும் பார்க்க

ஆன்லைன் வா்த்தகத்தில் லாபம் ஈட்டித் தருவதாக பெண்ணிடம் ரூ.30.57 லட்சம் மோசடி

ஆன்லைன் வா்த்தகத்தில் லாபம் ஈட்டித் தருவதாகக்கூறி பெண்ணிடம் ரூ.30 லட்சத்து 57 ஆயிரத்து 805 மோசடி செய்யப்பட்டது தொடா்பாக சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை, சரவணம்பட்டியைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க