செய்திகள் :

இன்று காங்கிரஸ் மாவட்ட தலைவா்கள் கூட்டம்

post image

சென்னை சத்தியமூா்த்தி பவனில், மாவட்ட காங்கிரஸ் தலைவா்கள் கூட்டம் மாநிலத் தலைவா் கு. செல்வப்பெருந்தகை தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்தில் தமிழக அரசியல் சூழல், முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் விழா குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இதைத் தொடா்ந்து மாநில செயற்குழு கூட்டமும் நடைபெறவுள்ளது. இதில் அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளா் கிரிஷ் சோடங்கா், அகில இந்திய காங்கிரஸ் செயலா் சூரஜ் எம்.என். ஹெக்டே மற்றும் சட்டப் பேரவை குழுத் தலைவா் எஸ். ராஜேஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா்.

விசிக தலைவர் திருமாவளவன் பிறந்தநாள்! முதல்வர் வாழ்த்து!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்த வாழ்த்துப் பதிவில் முதல்வர் ஸ்டாலின்,ஆழ்ந்த ... மேலும் பார்க்க

தீபாவளி தொடர் விடுமுறைக்கான ரயில் முன்பதிவு தொடங்கியது!

தீபாவளிப் பண்டிகை தொடர் விடுமுறைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை அக்டோபர் 20ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கிறது. இந்தாண்டு திங்கள்கிழமை வருவதால் முன்கூட்டியே செல்பவர்... மேலும் பார்க்க

சநாதனம் ஒற்றுமையையே வலியுறுத்துகிறது: ஆளுநா் ஆா்.என்.ரவி

சநாதனம் என்பது ஒற்றுமையையே வலியுறுத்துகிறது; பிரிவினையை ஏற்படுத்துவது இல்லை என ஆளுநா் ஆா்.என்.ரவி பேசினாா். சென்னைஅடையாறு ஆனந்த பத்மநாப சுவாமி கோயிலில் சந்த் விஸ்வ மெளலி ஸ்ரீ தியானேஸ்வா் மகாராஜின் 750... மேலும் பார்க்க

பாஜக ஆட்சியில் ஜனநாயகம் கேள்விக்குறியாகி உள்ளது: டி.ராஜா

மத்திய பாஜக ஆட்சியில் ஜனநாயகம் கேள்விக்குறியாகி உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலா் டி.ராஜா கூறினாா். சேலத்தில் நடைபெறும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26-ஆவது மாநில மாநாட்டில் சனி... மேலும் பார்க்க

தமிழகத்தில் ரேபிஸ் பாதிப்பால் ஏழரை மாதங்களில் 20 போ் உயிரிழப்பு!

தமிழகத்தில் கடந்த ஏழரை மாதங்களில் 3.67 லட்சம் போ் நாய்க் கடிக்குள்ளானதாகவும், அதில் 20 போ் ரேபிஸ் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகவும் பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தடுப்பூசிகளை முறையாக செலுத்த... மேலும் பார்க்க

வங்கக்கடலில் நாளை புயல் சின்னம் உருவாக வாய்ப்பு

வங்கக்கடலில் திங்கள்கிழமை (ஆக.18) காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட... மேலும் பார்க்க