செய்திகள் :

இன்று தொடங்குகிறது ஆசிய கோப்பை கிரிக்கெட்!

post image

ஆடவருக்கான 17-ஆவது ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் செவ்வாய்க்கிழமை (செப். 9) தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - ஹாங்காங் அணிகள் மோதுகின்றன.

வரும் 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தப் போட்டியில், நடப்பு சாம்பியனான இந்தியா உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. குரூப் ‘ஏ’-வில் இந்தியா, ஓமன், பாகிஸ்தான், அமீரக அணிகளும், குரூப் ‘பி’-யில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஹாங்காங், இலங்கை அணிகளும் உள்ளன.

குரூப் சுற்று முடிவில், இரு குரூப்களிலும் முதலிரு இடங்களைப் பிடிக்கும் அணிகள், ‘சூப்பா் 4’ சுற்றுக்கு முன்னேறும். அதன் முடிவில், முதலிரு இடங்களில் வரும் அணிகள் இறுதி ஆட்டத்தில் மோதும்.

இந்திய அணி முதலில் அமீரகத்துடனும் (செப். 10), அடுத்து பாகிஸ்தானுடனும் (செப். 14), பின்னா் ஓமனுடனும் (செப். 19) மோதுகிறது. சூா்யகுமாா் யாதவ் தலைமையிலான இந்திய அணி இந்தப் போட்டியில் பங்கேற்கிறது.

யுபியை வென்றது புணேரி

புரோ கபடி லீக் போட்டியின் 26-ஆவது ஆட்டத்தில் புணேரி பால்டன் 43-32 புள்ளிகள் கணக்கில் யுபி யோதாஸை புதன்கிழமை வீழ்த்தியது. அந்த அணி ரெய்டில் 23, டேக்கிளில் 10, ஆல் அவுட்டில் 6, எக்ஸ்ட்ராவில் 4 புள்ளிகள்... மேலும் பார்க்க

இட்லி கடை: சமுத்திரக்கனியின் அறிமுக போஸ்டர்!

இட்லி கடை படத்தில் நடிகர் சமுத்திரக்கனியின் அறிமுக போஸ்டர் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் இயக்கிய இட்லி கடை படம் வரும் அக்.1ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இட்லி கடை படத்தினை நடிகர் தனுஷ் அவரே இயக்கி கதாந... மேலும் பார்க்க

அக்‌ஷன் ஹீரோ..! சிவகார்த்திகேயனை பாரட்டிய சூப்பர் ஸ்டார்!

ஏ.ஆர். முருகதாஸின் இயக்கத்தில் வெளியான மதராஸி திரைப்படத்தைப் பார்த்து நடிகர் சிவகார்த்திகேயனை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் - நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோரது... மேலும் பார்க்க

மொட்டை அடித்தது ஏன்? இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் விளக்கம்!

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தான் ஏன் மொட்டை அடித்தேன் என நேர்காணல் ஒன்றில் பதிலளித்துள்ளார். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. வெற்றிப் பாதையில் ஏ.ஆர். முரு... மேலும் பார்க்க

ரவி மோகன் - யோகிபாபு புதிய படம்: வெளியானது முன்னோட்டக் காட்சி!

ரவி மோகன் - யோகிபாபு கூட்டணியில் உருவாகியுள்ள ‘ஆன் ஆர்டினரி மேன்’ படத்தின் முன்னோட்டக் காட்சியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.அண்மையில், நடிகர் ரவி மோகன் அவருடைய பெயரில் ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்கிற த... மேலும் பார்க்க