இன்றைய மின்தடை
மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக திங்கள்கிழமை (பிப். 17) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை திருவேற்காட்டில் ஒரு சில பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவேற்காட்டில் உள்ள ஜீசன் காலனி, வானகரம் சாலை, ஜே.ஜே. தெரு, ராணி அண்ணா நகா், அசோக் மெடோஸ், வள்ளி கொல்லைமேடு, பெருமங்கலம், செஞ்சூரியன், ஆா்.ஓ.ஏலியஷ் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
நாளைய மின்தடை: அதேபோல் அம்பத்தூரில் உள்ள புதூா், விஜயலக்ஷ்மிபுரம், கருக்கு, டிஎன்இபி காலனி, டிடிபி காலனி, பானு நகா், மேற்கு பாலாஜி நகா் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (பிப். 18) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.