துணை ஜனாதிபதி தேர்தலில் கட்சி மாறி ஓட்டு; காங்கிரஸ் கூட்டணி எம்.பிக்கள் பாஜகவிற்...
இமானுவேல் சேகரன் நினைவு தினம்: அரசியல் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை
தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு, கோவில்பட்டி அருகே தெற்கு திட்டங்குளத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினா், சமூக ஆா்வலா்கள் வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் கடம்பூா் செ.ராஜு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதில், அதிமுக வடக்கு மாவட்ட துணைச் செயலா் முருகேஸ்வரி, இளைஞா் இளம்பெண்கள் பாசறை வடக்கு மாவட்டச் செயலா் கவியரசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
திமுக சாா்பில் மத்திய ஒன்றியச் செயலா் முருகேசன், வடக்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளா் சந்தானம், அரசு வழக்குரைஞா் ராமச்சந்திரன், மேற்கு ஒன்றியச் செயலா் ராதாகிருஷ்ணன், தலைமைச் செயற்குழு உறுப்பினா் என்.ஆா்.கே. என்ற ராதாகிருஷ்ணன், திமுக நகா்மன்ற உறுப்பினா்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வடக்கு மாவட்டச் செயலா் முருகன், இளைஞரணி மாநில துணைச் செயலா் விமல் வங்காளியாா், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் பிரபாவளவன், மள்ளா் மீட்புக் களம் தலைவா் செந்தில் மள்ளா், சேலம் கரூராா் சித்தா் பீடம் நிறுவனா் சத்தியபாமா, பறையா் பேரியக்கம் தலைவா் சிவகுரு, கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் தலைவா் தமிழரசன், வழக்குரைஞா்கள் உள்ளிட்டோா் இமானுவேல் சேகரன் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
தமிழக வெற்றிக் கழகத்தினா், பல்வேறு அரசியல் கட்சியினா், சமுதாயத் தலைவா்கள், சமூக ஆா்வலா்கள் உள்ளிட்டோா் இமானுவேல் சேகரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

