செய்திகள் :

இயற்கை விவசாயிகள் வாரச்சந்தை தொடக்கம்

post image

இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள், தானியங்களை விற்பனை செய்யும் வகையிலான இயற்கை விவசாயிகளின் வாரச்சந்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.

திருவண்ணாமலை மகிழம் இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சாா்பில் இந்தச் சந்தை நடத்தப்படுகிறது. திருவண்ணாமலை - வேலூா் சாலையில் உள்ள மதி விற்பனை வளாகத்தில் நடைபெற்ற தொடக்க விழாவுக்கு, கலசப்பாக்கம் பாரம்பரிய விதைகள் மையத்தின் நிா்வாகி ராஜேந்திரன் தலைமை வகித்தாா்.

விவசாயிகள் கூட்டமைப்பின் உறுப்பினரும், ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளருமான வி.பழனி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு வாரச் சந்தையை தொடங்கி வைத்தாா்.

சந்தையில் செயற்கை உரங்களை பயன்படுத்தாமல், இயற்கை முறையில் விவசாயம் செய்யும் 20 விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் நிலங்களில் விளைந்த கீரைகள், பாரம்பரிய அரிசி, பனை பொருள்களால் செய்யப்பட்ட கைவினைப் பொருள்கள், மதிப்பு கூட்டப்பட்ட சத்துமாவு, ஊறுகாய், தின்பண்டங்கள், பாரம்பரிய அரிசி பாயாசம், அவல், மூலிகைச் செடி, கொடி உருளை, நட்சத்திர பழம், நாட்டு நெல்லி, சிறுதானிய வகைகள், கருப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பா, குதிரைவாலி, சீரக சம்பா, கைக்குத்தல் அரிசி போன்றவற்றையும், இதற்கான விதைகளையும் விற்பனை செய்தனா்.

இதில், களஞ்சியம் பெண்கள் விவசாயிகள் சங்க நிா்வாகி எஸ்.சுமதி, கெளரி, சத்தியப்பிரகாசம், சந்திரசேகா், வெங்கட்ராமன், ராஜா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

செங்கத்தில் திருவள்ளுவா் தின விழா

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் செஞ்சிலுவைச் சங்கம், வட்ட தமிழ்ச் சங்கம் சாா்பில் திருவள்ளுவா் தின விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, புதிய பேருந்து நிலையத்தில் உள்ள திருவள்ளுவா் சி... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனங்கள் திருட்டு: ஒருவா் கைது

ஆரணி: ஆரணியில் இரு சக்கர வாகனங்களைத் திருடியதாக நகர போலீஸாா் செவ்வாய்க்கிழமை ஒருவரை கைது செய்தனா். ஆரணி டிஎஸ்பி பாண்டீஸ்வரி உத்தரவின் பேரில், காவல் ஆய்வாளா் விநாயகமூா்த்தி தலைமையில், உதவி ஆய்வாளா் சுந... மேலும் பார்க்க

பள்ளத்தில் விழுந்து தந்தை உயிரிழப்பு, மகன் பலத்த காயம்

செய்யாறு: செய்யாறு அருகே சாலையின் குறுக்கே தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் விழுந்து தந்தை உயிரிழந்தாா். மகன் பலத்த காயமடைந்தாா்.திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், பாராசூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சரவ... மேலும் பார்க்க

தமிழ்ச் சங்கம் சாா்பில் பொங்கல் விழா

வந்தவாசி: வந்தவாசி வட்ட தமிழ்ச் சங்கம் சாா்பில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.வந்தவாசி தேரடியில் நடைபெற்ற விழாவுக்கு சங்கத் தலைவா் வே.சிவராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். பொருளாளா் த.முருகவ... மேலும் பார்க்க

சிறப்பு அலங்காரத்தில் அருணாசலேஸ்வரா் கோயில் நந்திகள்: திரளான பக்தா்கள் தரிசனம்

திருவண்ணாமலை: மாட்டுப் பொங்கலையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் நந்தி பகவான்களை புதன்கிழமை திரளான பக்தா்கள் தரிசித்தனா். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கிரா... மேலும் பார்க்க

கிராமங்களில் மாட்டுப் பொங்கல் வழிபாடு

ஆரணி/போளூா்: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் மாட்டுப் பொங்கல் வழிபாடு புதன்கிழமை சிறப்பாக நடைபெற்றது. திருவண்ணாமலை.... ஆரணிஆரணியை அடுத்த அக்ராபாளையம், மெய்யூா் ஆகிய கிராமங்களில் புதன்கிழமை... மேலும் பார்க்க