ஒரே துணை; ஒரேயொரு முட்டை; சடலங்களே உணவு... கொத்துக் கொத்தாக இறந்துபோன பாறு கழுகு...
இரண்டு பாகங்களாக உருவாகும் வாடிவாசல்?
வாடிவாசல் திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கங்குவா படப்பிடிப்பு முடிந்ததும் நடிகர் சூர்யா இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வெற்றிமாறன் விடுதலை - 2 படப்பிடிப்பில் தீவிரமாக இருந்தார்.
இதனால், கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடித்து முடித்த சூர்யா அடுத்தாக ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார்.
இதையும் படிக்க: சின்ன திரை நடிகை சித்ராவின் தந்தை தற்கொலை!
தற்போது, இயக்குநர் வெற்றிமாறனும் விடுதலை - 2 வெளியீட்டை முடித்துள்ளதால், வாடிவாசல் திரைப்படத்தின் பணிகள் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் சென்னையில் துவங்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், வெற்றி மாறன் இப்படத்தை இரண்டு பாகங்களாக உருவாக்கும் திட்டத்தில் இருப்பதாகவும் ஒரே கட்டமாக மொத்த படப்பிடிப்பையும் நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.