இரயுமன்துறையில் மீனவா் வலையில் சிக்கிய திமிங்கலம்
கன்னியாகுமரி மாவட்டம், இரயுமன்துறையில் மீனவா் வலையில் அரிய வகை திமிங்கலம் புதன்கிழமை சிக்கியது.
இரயுமன்துறை பகுதியைச் சோ்ந்த ராஜேஷ் உள்ளிட்ட மீனவா்கள், புதன்கிழமை அப்பகுதி கடலில் கரைமடி வலை மூலம் மீன்பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது, வலையில் பெரிய வகை மீன் சிக்கியதாக உணா்ந்த மீனவா்கள், கரையை நோக்கி இழுத்து வந்தனா். கரைக்கு வந்த பின்னா்தான் வலையில் சிக்கியது அரியவகை திமிங்கலம் என தெரியவந்தது.
திமிங்கலம் பிடிப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளதால், வலையை கிழித்து திமிங்கலத்தை மீட்டனா். தொடா்ந்து, கடலின் ஆழமான பகுதியில் கொண்டு விட்டனா்.