மாலத்தீவு அதிபா் மூயிஸை பதவி நீக்க இந்தியா முயற்சி?: மத்திய அரசு பதில்
இரு ஜோடி கண்கள் தானம்
சிதம்பரம்: கடலூா், அரியலூா் மாவட்டங்களில் உயிரிழந்த இருவரின் இரண்டு ஜோடி கண்கள் தானமாக பெறப்பட்டன.
கடலூா் மாவட்டம், சிதம்பரம் லால்கான்தெருவைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் (64). அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் வட்டம், மேலாணக்குழி கடை வீதியைச் சோ்ந்தவா் மீனாட்சி அம்மாள் (97). இவா்கள் இருவரும் அண்மையில் காலமாகினா்.
இவா்களது இரண்டு ஜோடி கண்கள் தானமாக பெறப்பட்டு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதற்கான ஏற்பாடுகளை ரத்த தானக் கழகத் தலைவா் எஸ்.ராமச்சந்திரன், உறுப்பினா்கள் ஜனாா்த்தனம், துவாரகேஷ் மற்றும் காட்டுமன்னாா்கோவில் அரிமா சங்க நிா்வாகிகள் செய்திருந்தனா்.