வீட்டை முற்றுகையிட்ட பாஜகவினருக்கு இளநீர், டீ கொடுத்த பிரியாங்க் கார்கே!
கால்நடைகளுக்கு நோய் தடுப்பூசி முகாம் இன்று தொடக்கம்
கடலூா் மாவட்டத்தில், கால்நடைகளுக்கு கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கி ஜன.31-ஆம் தேதி வரை நடைபெறும் என ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ், 6-ஆவது சுற்று கால் மற்றும் வாய் நோய் இலவச தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை முதல் ஜன.31-ஆம் தேதி வரை கிராமங்கள் வாரியாக நடைபெறுகின்றன.
கால்நடைகள் வளா்ப்போா் தங்கள் கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
இந்நோய் மிக கொடிய வைரஸ் கிருமிகள் மூலம் பிளவுபட்ட குளம்புகள் உடைய பசு, எருமை, வெள்ளாடு போன்ற இனங்களை எளிதாகவும், காற்று மற்றும் தண்ணீா் மூலம் மிக விரைவாக பரவக் கூடிய தன்மை உடையது.
இந்த நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு பால் சுரப்பது முற்றிலும் குறைந்துவிடும். கறவை மாடுகளின் கன்றுகள் உடனடியாக இறந்துவிடும். மலட்டு தன்மை ஏற்படும்.
நோய் வராமல் தடுப்பதற்கு ஆண்டுக்கு இருமுறை கால்நடைகளுக்கு தடுப்பூசி போடுவது சிறந்ததாகும். எனவே, கடலூா் மாவட்டத்தில் சுமாா் 3 லட்சம் கால்நடைகளுக்கு தடுப்பூசி போட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.