Duraimurugan-க்கு வந்த ரிப்போர்ட், Stalin தந்த Alert! | Elangovan explains | Vik...
குடியிருப்பு நலச் சங்க கூட்டமைப்பு பொதுக் குழு கூட்டம்
கடலூா் அனைத்து குடியிருப்பு நலச் சங்கங்களின் பொதுக் குழுக் கூட்டம் வில்வ நகா் அரசு ஊழியா்கள் சங்கக் கட்டடத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டமைப்புத் தலைவா் பாலு பச்சையப்பன் தலைமை வகித்தாா். சிறப்புத் தலைவா் மருதவாணன், ஆலோசகா் ஆறுமுகம் முன்னிலை வகித்தனா். பொதுச் செயலா் வெங்கடேசன் கடந்த ஆண்டு குடியிருப்போா் கூட்டமைப்பு செய்த பணிகள், நிகழாண்டில் திட்டமிடப்படும் பணிகள்ஆகியவற்றை எடுத்துரைத்தாா்.
பெண்ணையாற்றில் கடலூா் நத்தப்பட்டு முதல் தாழங்குடா வரை கரைகளின் இருபுறமும் வெள்ளத் தடுப்பு சுவா் கட்ட மாநில பட்ஜெட்டில் நிதி நிதி ஒதுக்கி, செயல்படுத்த வேண்டும்.
கடலூா் மாநகராட்சியுடன் 13 ஊராட்சிகளை இணைப்பதற்கு முன்பாக, அந்த ஊராட்சிகளில் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தி முடிவெடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டமைப்பின் இணை பொதுச் செயலா் தேவநாதன் வரவேற்றாா். உதவி பொதுச் செயலா் கண்ணன் நன்றி கூறினாா்.