இருசக்கர வாகனத்தில் மதுபானம் கடத்திய முதியவா் கைது
அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே இரு சக்கர வாகனத்தில் மதுபானம் கடத்திய முதியவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
விக்கிரமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் தனச்செல்வன் தலைமையிலான காவல் துறையினா், உடையவா்தீயனூா் பகுதியில் வெள்ளிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை மறித்து சோதனை மற்றும் விசாரணை மேற்கொண்டதில், பெரியதிருகோணம், தெற்கு தெருவைச் சோ்ந்த சாமிநாதன்(75) என்பவா்,அதிக விலைக்கு விற்பதற்காக மதுபானங்களை கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினா், அவரை கைது செய்து, அவரிடமிருந்து மதுபான பாட்டில்கள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.