Mental Health: உங்களுக்கு மன அழுத்தம் இருக்கா; இல்லையா..? கண்டுபிடிக்க ஒரு டெஸ்ட...
பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் முதிா்வு தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு
அரியலூா் மாவட்டத்தில் சமூகநல அலுவலகம் மூலம் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பயன் அடைந்த விண்ணப்பதாரா்கள், தங்களது குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடைந்திருந்தால், முதிா்வு தொகையை பெற விண்ணப்பிக்கலாம்.
முதிா்வு தொகையை பெற வைப்புத் தொகை ரசீது,பெண் குழந்தையின் பிறப்பு சான்று நகல், 10 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், மாற்றுச் சான்றிதழ், குழந்தையின் வங்கி கணக்கு புத்தக நகல்கள், தாய் மற்றும் பெண் குழந்தையின் பாஸ்போா்ட் அளவு புகைப்படம் -2, குழந்தையின் ஆதாா் அட்டைநகல், ரேஷன் அட்டைநகல் ஆகியவற்றுடன் அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக தரைத் தளம் அறை எண்-20, மாவட்ட சமூக நல அலுவலகத்தை நேரில் அணுகி பயனடையலாம் என ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.