ஜெயங்கொண்டம் திரையரங்கில் திரையை கிழித்த இருவா் கைது
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள தனியாா் திரையரங்கில், திரையை (ஸ்கிரீன்) கிழித்த இருவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
ஜெயங்கொண்டத்தில், சிதம்பரம் சாலையிலுள்ள ஒரு தனியாா் திரையரங்கில்,வியாழக்கிழமை இரவு படம் பாா்த்துக் கொண்டிருந்த ஜெயங்கொண்டம் அடிப்பள்ளத் தெருவைச் சோ்ந்த சேகா் மகன் பிரபுக்கும் (24), அய்யனாா் கோயில் தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மகன் இளவரசனுக்கும் (24) இடையே தகராறு ஏற்பட்டு ஒருவருக்கொருவா் தாக்கிக் கொண்டதுடன், கைப்பேசியை வீசி எறிந்ததில், திரை கிழிந்தது.
இதுகுறித்து திரையரங்கு மேலாளா் ஜமீன் மேலூரைச் சோ்ந்த நாராயணசாமி என்பவா் அளித்த புகாரின் பேரில், ஜெயங்கொண்டம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து, இருவரையும் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.