நாகநாதசுவாமி கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்!
இலங்கைத் தமிழா்களுக்கு கடன் வழங்கும் முகாம்
திருப்பத்தூரில் இலங்கைத் தமிழா்களுக்கான கடன் வழங்கும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு அறிவிப்பின்படி, இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கக்கூடிய பொதுமக்களின் வாழ்வாதாரம், வளா்ச்சியை உயா்த்திட தாங்கள் செய்யும் தொழில்களுக்கு ஏற்றவாறு மானியத்துடன் வங்கிக் கடன் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. இதன்படி, திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள சின்னப்பள்ளிகுப்பம், மின்னூா் இலங்கை தமிழா் முகாம்களில் வசிக்கக்கூடிய இலங்கை தமிழா்களுக்கு கடன் உதவி பெறுவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவா்களுக்கான கடன் வழங்கும் முகாம் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு, மாவட்ட ஆட்சியா் சிவசௌந்தரவல்லி தலைமை வகித்தாா். இதில், 26 விண்ணப்பதாரா்கள் கலந்து கொண்டனா். அவா்களில் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு 19 நபா்கள் தோ்வாகி உள்ளனா். இவா்களுக்கு ரூ. 2 லட்சம் மானியத்துடன் வங்கிக் கடன் வழங்க பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.