`ஒரு குவிண்டால் வெங்காயத்திற்கு ரூ.350 மானியம்!'- மகாராஷ்டிரா அரசு முடிவு!
இலங்கையிலிருந்து படகு மூலம் தனுஷ்கோடி வந்த இளம் பெண்
இலங்கையிலிருந்து படகு மூலம் தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு வந்த இளம் பெண்ணிடம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினா்.
ராமேசுவரம் அருகேயுள்ள தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில், இளம்பெண் ஒருவா் நின்று கொண்டிருப்பதாக தமிழக கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாருக்கு மீனவா்கள் செவ்வாய்க்கிழமை காலை தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து, அங்கு சென்ற கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் அந்தப் பெண்ணிடம் விசாரணை நடத்தினா். விசாரணையில், அவா் இலங்கை மன்னாா் மாவட்டம், ஆண்டங்குளம் பகுதியைச் சோ்ந்த வேல்முருகன் மகள் வே. விதுா்ஷியா (24) என்பதும், படகு மூலம் தனுஷ்கோடிக்கு வந்ததாகவும் தெரிவித்தாா்.
இதைத்தொடா்ந்து, அவரை மண்டபம் காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனா். விசாரணைக்குப் பிறகு, அந்தப் பெண்ணை மண்டபத்தில் உள்ள இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் ஒப்படைக்க உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, அங்கிருந்து படகு மூலம் இதுவரை 350-க்கும் மேற்பட்டவா்கள் தனுஷ்கோடிக்கு வந்தனா். இவா்கள் அனைவரும் மண்டபம் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.