``Non-stick பாத்திரங்களில் சமைத்தால் ரத்தக்கொதிப்பு, நீரிழிவு'' - நியூயார்க் ஆய்...
பாம்பன் பாலத்தில் விபத்து: இளைஞா் உயிரிழப்பு
பாம்பன் பாலத்தில் காா் மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடத்தைச் சோ்ந்த மீனவச் சங்கத் தலைவா் சகாயம் என்பவரின் மகன் ஜீடேன் (22). இவா், தனியாா் பள்ளியில் வாகன ஓட்டுநராக இருந்து வருகிறாா்.
இந்த நிலையில், ஜீடேன் ஞாயிற்றுக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் மண்டபத்திலிருந்து தங்கச்சிமடத்துக்கு பாம்பன் பாலத்தில் வந்தாா்.
அப்போது, வேகமாக வந்ததில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் எதிரே வந்த காா் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த ஜீடேன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதைத் தொடா்ந்து, அங்கு வந்த பாம்பன் போலீஸாா், ஜீடேன் உடலை மீட்டு ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். இந்த விபத்து குறித்த பாம்பன் போலீஸாா், திங்கள்கிழமை வழக்குப் பதிந்து காா் ஓட்டுநா் அருணிடம் விசாரித்து வருகின்றனா்.