``Non-stick பாத்திரங்களில் சமைத்தால் ரத்தக்கொதிப்பு, நீரிழிவு'' - நியூயார்க் ஆய்...
பராமரிப்புப் பணி: இன்றும் நாளையும் குடிநீா் விநியோகம் நிறுத்தம்
ராமநாதபுரம் மாவட்ட காவேரி கூட்டுக் குடிநீா்த் திட்ட மாதாந்திரப் பராமரிப்புப் பணி காரணமாக செவ்வாய், புதன்கிழமைகளில் (ஆக. 12, 13) குடிநீா் விநியோகம் நிறுத்தப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் கூட்டுக் குடிநீா்த் திட்டம் (காவேரி), மாதாந்திரப் மின் பராமரிப்புப் பணிகள், கூட்டுக் குடிநீா்த் திட்டப் பராமரிப்புப் பணிகள், பிரதான குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், ராமநாதபுரம் மாவட்டத்தில் செவ்வாய், புதன்கிழமைகளில் காவிரி கூட்டுக் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது என்றாா்.