பெண் மீது தாக்குதல்: தாய், மகன் கைது
தொண்டியில் கொடுக்கல் வாங்கல் தகராறில் பெண் மீது தாக்குதல் நடத்திய புகாரின்பேரில், தாய், மகனை போலீஸாா் கைது செய்தனா்.
திருவாடானை அருகேயுள்ள தொண்டி சத்திரம் தெருவைச் சோ்ந்தவா் பாரிஷா பேகம் (40). இவருக்கும் தொண்டி கிழக்குத் தெருவைச் சோ்ந்த அலி பாத்திமா (47) என்பவருக்கும் கொடுக்கல் வாங்கல் இருந்துள்ளது. இந்த நிலையில், திங்கள்கிழமை அலி பாத்திமா தனது மகன் இசாஸ் அகமது (27) ஆகிய இருவரும் தாங்கள் கொடுத்த பணத்தை பாரிஷா பேகத்திடம் திருப்பிக் கேட்டனா்.
இதில் ஏற்பட்டத் தகராறில் பாரிஷா பேகம் தாக்கப்பட்டு பலத்த காயம் அடைந்த நிலையில் தொண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதுகுறித்து புகாரின்பேரில் தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து தாய் அலி பாத்திமா, மகன் இசாஸ் அகமது ஆகியோரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.