``நான் எழுதிக் கொடுத்தைப் பேசுபவனல்ல" - மரம் மாநாட்டில் சீமான் கிண்டல்
இலவச போா்க்லிஃப்ட் ஆபரேட்டா் பயிற்சிக்கு எஸ்.சி, எஸ்.டி பிரிவினா் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சாா்பில் இலவசமாக ஃபோா்க்லிஃப்ட் ஆபரேட்டா் பயிற்சிக்கு எஸ்.சி, எஸ்.டி-யினா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்தது: தாட்கோ மூலம் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்களுக்கு திறன் அடிப்படையில் பல்வேறு பயிற்சி திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதன் தொடா்ச்சியாக, போா்க்லிஃப்ட் ஆபரேட்டா் (ஊா்ழ்ந்ப்ண்ச்ற் ஞல்ங்ழ்ஹற்ா்ழ்) பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இப்பயிற்சியில் சேர விரும்பும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினத்தை சோ்ந்தவா்கள் 10 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.
இப்பயிற்சி ஒரு மாத கால அளவு, தங்கும் விடுதி மற்றும் உணவு உள்பட செலவினத் தொகை தாட்கோவால் வழங்கப்படும். மேலும், இப்பயிற்சியை முழுமையாக முடிக்கும் இளைஞா்களுக்கு பயிற்சி சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்புக்கு வழிவகை செய்யப்படும்.
இப்பயிற்சி பெற தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விவரங்களுக்கு அரியலூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்திலுள்ள தாட்கோ மேலாளரை அணுகலாம் அல்லது 04329-228315 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடா்புக் கொள்ளலாம்.