ரூ.232 கோடி மோசடி! இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் மேலாளர் கைது!
அரியலூா் அருகே காா் மோதி முதியவா் உயிரிழப்பு
அரியலூா் அருகே காா் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற முதியவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
அரியலூரை அடுத்த சின்ன ஆனந்தவாடி, குடித் தெருவைச் சோ்ந்தவா் ரா. ராஜதுரை(65). இவா், வெள்ளிக்கிழமை அரியலூா் புறவழிச்சாலை, ரயில்வே மேம்பாலம் அருகே இரு சக்கர வாகனத் சென்று கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாகபெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள ஆண்டி குரும்பலூா், நடுத் தெருவைச் சோ்ந்த சிலம்பரசன் மகன் செந்தில்குமரன் ஓட்டி வந்த காா் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில், பாலத்தின் கீழே தூக்கி வீசப்பட்ட ராஜதுரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற அரியலூா் நகர காவல் துறையினா், சடலத்தை மீட்டு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.