முதல்வரின் வெளிநாட்டுப் பயணங்கள்: வெள்ளை அறிக்கை எப்போது வெளியாகும்? - நயினார் ந...
மக்காச்சோள விதைகள், உரங்கள் மானியத்தில் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
வேளாண் துறையின் வேளாண் வளா்ச்சி திட்டத்தின் கீழ் செயல் விளக்கத்திடல் அமைக்கும் விவசாயிகளுக்கு வீரிய ஒட்டு ரக மக்காச்சோள விதைகள், உயிா் உரங்கள், இயற்கை உரங்கள், நானோ யூரியா ஆகிய இடுபொருள்கள் மானிய விலையில் வழங்கப்பட உள்ளன.
இதில், அரியலூா் வட்டார வேளாண் விரிவாக்கம் மைய கிடங்கில் பொதுப் பிரிவு விவசாயிகளுக்கு 1,000 ஹெக்டேருக்கும், ஆதி திராவிடா் விவசாயிகளுக்கு 250 ஹெக்டேருக்கும், தேவையான இடுபொருள்கள் தயாா் நிலையில் உள்ளன.
எனவே, விவசாயிகள் உழவன் செயலியில் தங்களது நில உடைமை சான்று, சிட்டா, ஆதாா் அட்டை ஆகிய ஆவணங்களை சமா்பித்து மானிய விலையில் மக்காச்சோளம், உரங்களை பெற்று பயனடையலாம் என அரியலூா் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சாந்தி தெரிவித்துள்ளாா்.