கீழப்பழுவூா் பகுதிகளில் இன்று மின்நிறுத்தம்
அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் துணை மின்நிலையத்தில் சனிக்கிழமை (ஆக.30) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான கீழப்பழுவூா், மேலப்பழுவூா், கோக்குடி, பூண்டி, மாத்தான்குளம், வைப்பம், கல்லக்குடி, கருவிடைச்சேரி, அருங்கால், பொய்யூா், கீழவண்ணம் ஆகிய கிராமங்களில் காலை 9 மணி முதல் பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் இளஞ்செழியன் தெரிவித்துள்ளாா்.