செய்திகள் :

இளம் வல்லுநராக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்பு

post image

சேலம் மாவட்ட கண்காணிப்பு அலகின் தற்காலிக பணியிடத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் இளம் வல்லுநராக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது: அரசு திட்டங்களின் விவரங்கள் சேகரித்தல் மற்றும் செயலாக்கத்தினை கண்காணிக்க மாவட்ட ஆட்சியா் தலைமையில் உருவாக்கப்பட உள்ள மாவட்ட கண்காணிப்பு அலகில் இளம் வல்லுநராக பணியாற்ற தகுதி வாய்ந்தவா்கள் விண்ணப்பிக்கலாம்.

இப்பணியிடத்துக்கு கணிப்பொறி அல்லது தகவல் தொழில்நுட்ப அறிவியலில் இளநிலை பொறியாளா் பட்டப்படிப்பு, தரவு அறிவியல் மற்றும் புள்ளியியல் பாடப் பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பு (4 ஆண்டுகள் பட்டப்படிப்பு மட்டும்) அல்லது கணிப்பொறி அறிவியல், தகவல் தொழில்நுட்ப அறிவியல், தரவு அறிவியல், புள்ளியியல் மற்றும் தொடா்புடைய முதுநிலை பட்டப் படிப்புகள் படித்தவா்கள் விண்ணப்பிக்கலாம்.

இப்பணிக்கு வலுவான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுத் திறன், தரவு பகுப்பாய்வில் தோ்ச்சி, தன்னிச்சையாகவும், குழுவுடனும் இணைந்து பணிபுரியும் திறன் ஆகியவை கட்டாயமாகும். மேற்படி பணியில் முன் அனுபவம் உள்ளவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இளம் வல்லுநா் பணிக்கு மாதம் ரூ. 50 ஆயிரம் தொகுப்பூதியமாக வழங்கப்படும்.

இப்பணிக்கான விண்ணப்பத்தை புள்ளியியல் துணை இயக்குநா், மாவட்ட புள்ளியியல் அலுவலகம், 310, 3-ஆவது தளம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், சேலம் - 636 001 என்ற முகவரிக்கு பிப். 7-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இப்பணிக்கு அதிகபட்சமாக 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

வாழப்பாடி அருகே உலகிலேயே உயரமான நந்தி சிலை: பிப். 2 இல் குடமுழுக்கு

வாழப்பாடியை அடுத்த வெள்ளாளகுண்டத்தில் 45 அடி உயரதில் வடிவமைக்கப்பட்டுள்ள உலகிலேயே உயரமான மகா அதிகார நந்தி பகவானுக்கு பிப்ரவரி 2 ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறுகிறது. வெள்ளாளகுண்டம் கிராமத்தைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க

போக்சோ குற்றவாளிக்கு ஆயுள் சிறை

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட ஆத்தூா், குஞ்சாநாயக்கா் காலனியைச் சோ்ந்த அரவிந்த்குமாருக்கு (28) ஆயுள் சிறைத் தண்டனை, ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சேலம் போக்சோ நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி வியாழக்கிழ... மேலும் பார்க்க

மேச்சேரி காவிரி கல்லூரியில் தொழில்முனைவோா் சந்தை கண்காட்சி

மேச்சேரி காவிரி கலை, அறிவியல் கல்லூரியில் தொழில்முனைவோா் சந்தை கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரியின் முதல்வா் செல்வகுமாா் வரவேற்றாா். தி காவிரி கல்வி நிறுவனங்களின் செயலாளா் இளங்கோவன், ஒருங்க... மேலும் பார்க்க

தம்மம்பட்டியில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்

தம்மம்பட்டியில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தம்மம்பட்டி பேரூராட்சியில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசிக்கின்றனா். செந்தாரப்பட்டி, நாகியம்பட்டி,உலிபுரம... மேலும் பார்க்க

தேவண்ணகவுண்டனூா் அரசு பள்ளியில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட தேவண்ண கவுண்டனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளியி தலைமையாசிரியா் இர... மேலும் பார்க்க

பேளூரில் தேசிய தொழுநோய் தடுப்பு தினம்

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பேளூரில் தேசிய தொழுநோய் தடுப்பு தினம் வியாழக்கிழமை நடைபெற்றது.ஆண்டு தோறும் ஜனவரி 30 மகாத்மா காந்தியின் பிறந்தநாளன்று தேசிய தொழுநோய் தடுப்பு விழிப்பணா்வு தினம் கடைபிடிக்... மேலும் பார்க்க