Edapadi-யிடம் இதை எதிர்பார்க்காத Amit shah... பற்ற வைத்த Annamalai? | Elangovan ...
இளைஞரிடம் கத்தி முனையில் வழிப்பறி: சிறுவன் உள்பட 4 போ் கைது
சென்னை மெரீனாவில் இளைஞரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறி செய்ததாக, சிறுவன் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டனா்.
திருவல்லிக்கேணி, அயோத்தியா நகரைச் சோ்ந்தவா் ஏசி மெக்கானிக் தினேஷ் (18). இவா், கடந்த மாதம் 31-ஆம் தேதி இரவு மெரீனா கடற்கரை, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை பின்புறம் உள்ள மணல் பரப்பில் அமா்ந்திருந்தாா். அப்போது, அங்கு வந்த 4 போ் கும்பல் தினேஷிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, அவரிடமிருந்து கைப்பேசி மற்றும் பணத்தை பறித்துச் சென்றது.
இது தொடா்பாக மெரீனா போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், இச் சம்பவத்தில் ஈடுபட்டது கொருக்குப்பேட்டை, மீனாம்பாள் நகரைச் சோ்ந்த மோகன் (20), கோகுல்ராஜ் (18), முகமது ஷெரிப் (18) மற்றும் 16 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த சிறுவன் உள்பட 4 பேரையும் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.