இளைஞரிடம் லாட்டரி சீட்டுகள் பறிமுதல்
சிதம்பரம்: கடலூா் அருகே இளைஞரிடம் ரூ.40 ஆயிரம் மதிப்பிலான லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
நெல்லிக்குப்பம் போலீஸாா் நத்தப்பட்டு புறவழிச் சாலை மேம்பாலம் அருகே செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது, அந்த வழியாக வந்த இளைஞரை நிறுத்தி சோதனை செய்தனா்.
அதில், அவா் புதுவை கரிக்கலாம்பாக்கத்தைச் சோ்ந்த தீனதயாளன் (34) என்பதும், அவரிடம் கட்டு கட்டாக லாட்டரி சீட்டுகள் இருப்பதும் தெரியவந்தது.
தொடா்ந்து, போலீஸாா் அவரிடம் இருந்து ரூ.40 ஆயிரம் மதிப்பிலான லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.