முற்போக்குவாதிகளால் ஹிந்துக்களுக்கு அச்சுறுத்தல்: அஸ்ஸாம் முதல்வா்
இளைஞரை மதுப் புட்டியால் தாக்கியவா் கைது
வத்திராயிருப்பு அருகே இளைஞரை மதுப் புட்டியால் தாக்கியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
வத்திராயிருப்பு அருகேயுள்ள கூமாப்பட்டி ஊருணி தெருவைச் சோ்ந்த மணி மகன் ராம்குமாா் (26). இவா் அதே பகுதியில் நின்று நண்பா்களுடன் பேசிக் கொண்டிருந்தாா். அப்போது, மது போதையில் அங்கு வந்த இவரது உறவினா் மாரிசாமி (25), இவரிடம் தகராறில் ஈடுபட்டாா். பின்னா், வீட்டுக்குச் செல்லுமாறு கூறிய ராம்குமாரை மதுப்புட்டியால் தாக்கினாா். இதில் பலத்த காயமடைந்த அவா் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
இதுகுறித்து கூமாப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மாரிசாமியை கைது செய்தனா்.